- Advertisement -
அருண் விஜய் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘மிஷன் சாப்டர்-1’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
கடந்த 2007-ம் ஆண்டு வௌியான அஜித்தின் கிரீடம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனவர் ஏ.எல்.விஜய். இதைத் தொடர்ந்து பொய் சொல்ல போறோம், மதராசப்பட்டினம், தெய்வ திருமகள், தாண்டவம், தலைவா, சைவம், இது என்ன மாயம், தேவி, வனமகன், தியா, தலைவி, ஆகிய படங்களை இயக்கி இருக்கிறார். இறுதியாக, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை தழுவி தலைவி படத்தை இயக்கினார். அதில், பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடித்திருந்தார். இப்படத்தை தொடர்ந்து ஏ.எல்.விஜய் நடிகர் அருண் விஜய்யுடன் கை கோர்த்துள்ளார். இருவரும் இணைந்த படத்திற்கு மிஷன் சாப்டர் 1 என தலைப்பு வைத்துள்ளனர்.
