Homeசெய்திகள்சினிமா'மிஷன்' படத்தில் தனது மிஷனைத் துவங்கிய அருண் விஜய்!

‘மிஷன்’ படத்தில் தனது மிஷனைத் துவங்கிய அருண் விஜய்!

-

அருண் விஜய் ‘மிஷன்’ படத்தின் டப்பிங் பணிகளைத் துவங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

நடிகர் அருண் விஜய் தற்போது ஏஎல் விஜய் இயக்கத்தில் ‘மிஷன் அத்தியாயம் 1’ படத்தில் நடித்து முடித்துள்ளார். படத்திற்கு முன்னர் ‘அச்சம் என்பது இல்லையே’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. மலையாள நடிகை நிமிஷா சஜயனும் இந்தப் படத்தில் நடித்துள்ளார்.


எமி ஜாக்சன் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  ஏ.எல்.விஜய்யின் ‘மதராசப்பட்டினம்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான எமி ஜாக்கன், 5 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்கிறார்.

‘மிஷன்’ படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரியில் முடிவடைந்தது. படம் முழுக்க முழுக்க லண்டனில் படமாக்கப்பட்டுள்ளது. தற்போது படத்தின் டப்பிங் பணிகள்துவங்கியுள்ளன.  அருண் விஜய் தனது பகுதிகளுக்கான டப்பிங் பணிகளைத் துவங்கியுள்ளதாகத் தெரிகிறது.

தன் குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு முன்னர் தந்தை சிறையில் அடைக்கப்படுகிறார். அவர் அங்கிருந்து தப்பி தனது மகளின் உயிரைக் காப்பாற்றினாரா என்பது தான் கதைக்களம்.

ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.

 

MUST READ