தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அசின். தமிழில் உள்ளம் கேட்குமே என்ற திரைப்படத்தில் அறிமுகமான அசின் அடுத்தடுத்து முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்தார். விஜய்யுடன் போக்கிரி, காவலன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சூர்யாவுடன் அவர் நடித்த கஜினி திரைப்பம் பெரும் வெற்றி பெற்றது.
வரலாறு, ஆழ்வார், வேல், தசாவதாரம், மஜா உள்ளிட்ட பல திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். இந்தியிலும் ஸ்டார் நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். பிஸியான நடிகையாக வலம் வந்த அசின் தொழிலதிபர்-மைக்ரோமேக்ஸ் இணை நிறுவனர் ராகுல் ஷர்மாவை 2016-ம் ஆண்டும் திருமணம் செய்து கொண்டார். . திருமணத்திற்குப் பிறகு அசின் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். இவர்களுக்கு ஆரின் என்ற மகள் உள்ளார்.
அசின் தனது 38-வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். அவருக்கு நடிகர், நடிகைகள் உள்பட திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.