- Advertisement -
பருத்திவீரன் திரைப்பட புகழ் நடிகர் செவ்வாழை ராசு காலமானார்
பருத்திவீரன் திரைப்பட புகழ் நடிகர் செவ்வாழை ராசு உடல் நலக்குறைவால் காலமானார். உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த சில மாதங்களாக மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிர் பிரிந்தது.
அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்த ‘பருத்திவீரன்’ திரைப்படத்தில் ‘பிணம் தின்னி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் செவ்வாழை ராசு. இவர் குணச்ச்தித்திர நடிகராகவும், காமெடி நடிகராகவும் நடித்துள்ளார். கிழக்கு சீமையிலேயே, பருத்திவீரன், மைனா, கந்தசாமி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த ராசுவுக்கு 70 வயதாகிறது.
இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இவரது சொந்த ஊர் தேனி மாவட்டம் வருசநாடு அடுத்த கோரையூத்து கிராமமாகும். இவரது இறுதி அஞ்சலி கோரையூத்து கிராமத்திலேயே நடைபெறவுள்ளது.