spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'பைசன்' வாழ்க்கை வரலாற்று படம் அல்ல.... இயக்குனர் மாரி செல்வராஜ்!

‘பைசன்’ வாழ்க்கை வரலாற்று படம் அல்ல…. இயக்குனர் மாரி செல்வராஜ்!

-

- Advertisement -

இயக்குனர் மாரி செல்வராஜ், பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர்.'பைசன்' வாழ்க்கை வரலாற்று படம் அல்ல.... இயக்குனர் மாரி செல்வராஜ்! அதைத்தொடர்ந்து வாழை எனும் திரைப்படத்தையும் இயக்கி இருக்கிறார் மாரி செல்வராஜ். இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இதற்குப் பிறகு மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. இதில் துருவ் விக்ரம், கலையரசன் அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.இந்தப் படத்திற்கு பைசன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தை நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனமும், அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்க உள்ளார். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. நேற்று இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜை உடன் தொடங்கப்பட்டது.'பைசன்' வாழ்க்கை வரலாற்று படம் அல்ல.... இயக்குனர் மாரி செல்வராஜ்! இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நெல்லை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படம் குறித்து மாரி செல்வராஜ், பைசன் திரைப்படம் கபடி சம்பந்தமான கதைக்களம் தான். ஆனால் வாழ்க்கை வரலாற்று படம் அல்ல எனவும் இது கற்பனை கதை தான் எனவும் தெரிவித்திருக்கிறார்.

ஏற்கனவே இந்த படம் கபடி வீரர் மனத்தி கணேசனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாக்கப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்தது குறிப்பிடத்தக்கது.

MUST READ