Homeசெய்திகள்சினிமாபொம்மை நாயகி மார்ச் 10-ல் ஓ.டி.டி.யில் வெளியீடு

பொம்மை நாயகி மார்ச் 10-ல் ஓ.டி.டி.யில் வெளியீடு

-

பொம்மை நாயகி மார்ச் 10-ல் ஓ.டி.டி.யில் வெளியீடு

யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள பொம்மை நாயகி திரைப்படம், வரும் மார்ச் 10-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், யோகி பாபு நடிப்பில் உருவான பொம்மை நாயகி திரைப்படம் கடந்த பிப்ரவரி 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அறிமுக இயக்குனர் ஷான் இயக்கத்தில் உருவான இப்படத்தில் நடிகை சுபத்ரா, ஹரி கிருஷ்ணன், ஸ்ரீமதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர்.

பொம்மை நாயகி படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், ஓ.டி.டி. வெளியீடு குறித்த அறிவிப்பு தற்போது வௌியாகி உள்ளது. வரும் மார்ச் 10-ம் தேதி ஜீ5 ஓ.டி.டி. தளத்தில் பொம்மை நாயகி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

MUST READ