சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெலுங்கு இயக்குனருடன் கூட்டணி அமைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார்,பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத் ஆகியோரும் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் அடுத்ததாக ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும் தமிழ் சினிமா வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. இதற்கிடையில் தற்போது தெலுங்கு இயக்குனர் பாபி இயக்கத்தில் ரஜினிகாந்த் புதிய படத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
பாபி கடைசியாக சிரஞ்சீவி இயக்கத்தில் ‘வால்டர் வீரைய்யா’ படத்தை இயக்கியிருந்தார். தற்போது அவர் ரஜினிக்காக மாஸ் எண்டெர்டெயினர் கதை ஒன்றை உருவாக்கி இருப்பதாகவும் அதற்கு ரஜினிகாந்த் சம்மதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படத்தை ‘வாரிசு’ படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சூப்பர் ஸ்டார் யாருடன் கைகோர்க்கிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்!