Homeசெய்திகள்கட்டுரைஅமைச்சரவை மாற்றம்! 2026 தேர்தலுக்கு ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!

அமைச்சரவை மாற்றம்! 2026 தேர்தலுக்கு ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!

-

- Advertisement -

அமைச்சரவை மாற்றம் 2026 சட்டமன்ற தேர்தலை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்படும் என மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

தமிழக அமைச்சரவை மாற்றம் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறி இருப்பதாவது:- சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக அமைச்சர்கள் மீது நெருக்கடி கொடுக்க தொடங்கியுள்ளார். மொத்தம் 4 அமைச்சர்கள் நீதிமன்றங்கள் வாயிலாக பிரச்சினைக்கு உள்ளாகி உள்ளனர். துரைமுருகன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பொன்முடி போன்றவர்கள் ஏற்கனவே உள்ள வழக்குகளில் நீதிமன்றங்களின் மூலமாக பிரச்சினைக்கு உள்ளாகிறார்கள். ஆனால் செந்தில்பாலாஜியை மட்டும் டாஸ்மாக் ரெய்டு மூலமாகவும் குறிவைக்கிறார்கள். பழைய வழக்கு மூலம் உச்சநீதிமன்றத்தில் போட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டது தவறு. அவர் அமைச்சர் பதவியை தொடரக்கூடாது என்று கெடு விதிக்கிறார்கள். சட்டப்பிரிவு 21ல் தனி மனித உரிமைகள் பாதிக்கப்படுகிறது என்பதன் அடிப்படையில்தான்  அஜித்பவார்,  ஹேமந்த் சோரன், கெஜ்ரிவால் போன்றவர்கள் விடுவிக்கப்பட்டனர். அவர்களில் கெஜ்ரிவாலுக்கு மட்டும் முதலமைச்சராக தொடரக்கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டது. பின்னர் தேர்தலில் அவர் தோற்றுவிட்டார். செந்தில்பாலாஜி சிறையில் உள்ளபோது இலாகா இல்லாத அமைச்சராக இருந்தார். பிணையில் வெளியானபோது நீதிமன்றம் அமைச்சராக தொடர எந்தவித தடையும் இல்லை என்று சொன்னது. அதன்படிதான் அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது.

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வரலாறு காணாத சிறப்பு திட்டத்தை அறிவித்த தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி

தற்போது ஆளுநருக்கு எதிரான வழக்கில் திமுக ஆதரவாக உச்சநீதிமன்றம் மிகப்பெரிய தீர்ப்பை வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பை பாஜக மிகவும் கடுமையயாக விமர்சிக்கிறது. செந்தில்பாலாஜியை எடப்பாடியும் ஏற்க தயாராக இல்லை. பாஜகவும் ஏற்கத் தயாராக இல்லை. அவர்கள் ஓரளவுக்கு வெல்லக்கூடிய இடமாக நினைப்பது கொங்கு மண்டலம். அந்த கொங்கு மண்டலத்தில் தேர்தல் வேலைகளில்  செந்தில் பாலாஜி கில்லாடி. அதை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் வேளைகளில் தெளிவாக தெரிந்தது. அவரது தேர்தல் வேலைகளை தடுத்து நிறுத்தியது எஸ்.பி.வேலுமணி. கோவை மாநகராட்சி தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியை பெற்றதால், அவரை சிறையில் அடைக்க வேண்டும் என்று அண்ணாமலை கோவை தேர்தலில் போட்டியிட்டார். வேலுமணி, அதிமுக வாக்குகளை அண்ணாமலைக்கு தள்ளிவிட்டார். கடைசி 2 நாட்களில் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் காணாமல் போனார். சிறையில் இருந்த செந்தில்பாலாஜி பீல்டு ஒர்க் செய்து, அண்ணாமலையை தோற்கடித்தார்.

செந்தில் பாலாஜியை அடக்கவைக்காவிட்டால் சட்டமன்றத் தேர்தலில் கொங்கு பகுதியில் வெற்றிபெற முடியாது. அதனால் டாஸ்மாக்கில் சோதனை மேற்கொள்கிறார்கள். ஆயிரம் கோடி முறைகேடு நடைபெற்றதாக கூறுகிறார்கள். உச்சநீதிமன்றத்தில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறாயா? அல்லது ஜாமினை ரத்து செய்யவா? என கேட்கிறார்கள். நாளை வழக்கு விசாரணைக்கு வருகிறபோது, கபில்சிபல் எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்கிறார். உச்சநீதிமன்றம் திருப்தி அடைந்தால், பிரச்சினை இல்லை. இல்லாவிட்டால் பதவியை ராஜினாமா செய்வார். அடுத்தபடியாக பொன்முடி. அவரது பேச்சுக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இதன் மூலம் வனத்துறை, மின்துறை, டாஸ்மாக் போன்ற துறைகள் காலியாகின்றன. இதனால் மின்துறை தங்கம் தென்னரசுவுக்கும், டாஸ்மாக் முத்துசாமிக்கும் கொடுப்பதாக ஏற்பாடுகள் நடைபெறுகிறது. இல்லாவிட்டால் புது அமைச்சர்கள் போடலாமா என்று பார்க்கிறார்கள். திருவையாறு துரை சந்திரசேகர், மானாமதுரை தமிழரசி இந்த 2 பெயர்கள்  முன்னிலையில் உள்ளன. துரை சந்திரசேகர், ஏற்கனவே அந்த மாவட்டத்தை சேர்ந்த கோவி.செழியன் அமைச்சராக உள்ளார். துரை. சந்திரசேகருக்கு வழங்கப்பட்டால் முக்குலத்தோர் சமுதாயத்திற்கு அமைச்சர் பொறுப்பு அதிகரிக்கும். விழுப்புரத்தில் லட்சுமணனை கொண்டுவரலாமா, மஸ்தானை கொண்டுவரலாமா என்று ஒரு கணக்கு உள்ளது. இவை எல்லாமே நாளை செந்தில்பாலாஜி வழக்கில் நடைபெறுவதை பொருத்துதான் முடிவு செய்வார்கள். அதுவரை சட்டப்போராட்டம் நடத்த பார்ப்பார்கள்.

பொன்முடி மீது நடவடிக்கை எடுப்பதில் திமுக தலைமை உறுதியாக உள்ளது. அதனால்தான் கனிமொழி கண்டனம் தெரிவித்தார். அதன் காரணமாகவே அவரது கட்சிப்பதவி பறிக்கப்பட்டு திருச்சி சிவாவுக்கு வழங்கப்பட்டது. அடுத்து அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாக நீதிமன்றம் வழக்குப்பதிவு செய்துள்ளது. நீதிமன்றம் வழக்கை கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவை எல்லாவற்றையும் கணக்கில் கொண்டு அவரை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளார்கள். அதிமுக, பாஜக செந்தில்பாலாஜியை எதிர்ப்பதன் மூலம் திமுகவிலும், கட்சி தலைமையிடமும் அவருக்கு செல்வாக்கு கூடுகிறது. திமுக அவருக்கு கொடுக்கும் மதிப்பு அதிகமாகும்.

திமுக - அண்ணா அறிவாலயம்

மானாமதுரை தமிழரசி அமைச்சர் ஆகினால், தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தை உள்ளே கொண்டுவர முடியும். அந்த சமுதாய வாக்குகளை ஆனந்தன் அய்யாசாமி என்கிற ஆளை வைத்து பாஜக  திரட்டி வைத்துள்ளது. சீமான் கிருஷ்ணசாமி போன்றவர்கள்  பட்டியல் இனத்தில் இருந்து வெளியேறுவது போன்ற கருத்துக்களை முன்னெடுத்து வருகிறார்கள். இவற்றை எல்லாம் சபரீசன் தலைமையிலான பென் அமைப்பு மேற்கொண்டு வருகிறது. புதிய அமைச்சர்கள் தேர்வில் திமுவின் தேர்தல் வியூகங்களும் வருகிறது. அமைச்சர் பொறுப்பு இல்லால், செந்தில்பாலாஜியை தேர்தல் பொறுப்பை மட்டும் கவனிக்கும் நபராக செந்தில்பாலாஜியை கொண்டு வருகிறார்கள். புதிதாக யாரையாவது அமைச்சராக்கினால் திமுக வீக் ஆக உள்ள சமுதாயங்களை சரிபடுத்தலாம், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ