Homeசெய்திகள்சினிமாஎன் மனைவி சொன்னதால அந்த படம் பார்க்க போனேன்.... 'லப்பர் பந்து' குறித்து செஃப் வெங்கடேஷ் பட்!

என் மனைவி சொன்னதால அந்த படம் பார்க்க போனேன்…. ‘லப்பர் பந்து’ குறித்து செஃப் வெங்கடேஷ் பட்!

-

- Advertisement -

லப்பர் பந்து படம் குறித்து செஃப் வெங்கடேஷ் பட் பேசி உள்ளார்.என் மனைவி சொன்னதால அந்த படம் பார்க்க போனேன்.... 'லப்பர் பந்து' குறித்து செஃப் வெங்கடேஷ் பட்!

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி இருந்த லப்பர் பந்து திரைப்படம் கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி திரைக்கு வந்தது. இந்த படத்தினை அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து எழுதி, இயக்கியிருந்தார். இதனை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கும் நிலையில் தினேஷ் புருஷோத்தமன் இதன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டிருந்தார். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து அட்டகத்தி தினேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் சுவாஸ்விகா, காளி வெங்கட், பாலசரவணன், தேவதர்ஷினி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் இப்படத்தில் நடித்திருந்தனர். கிரிக்கெட் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி இருந்த இந்த படம் வெளியான முதல் நாளிலிருந்தே பாசிட்டிவான வசனங்களை பெற்று வருகிறது. அந்த வகையில் பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளையும் பெற்று வருகிறது. மாரி செல்வராஜ், சிவகார்த்திகேயன் போன்ற பல பிராபலங்கள் இந்த படத்தினை பாராட்டி வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது செஃப் வெங்கடேஷ் பட் இணைந்துள்ளார். அதாவது செஃப் வெங்கடேஷ் பட் தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், “ரொம்ப வருடம் கழித்து என் மனைவி சொன்னார் என்று நல்ல படத்திற்கு போனேன். லப்பர் பந்து அருமையான படம். இயக்குனர் அருமையான இயக்கியிருக்கிறார். நான் நிறைய படங்கள் பார்க்க மாட்டேன். ஆனால் அந்த படத்தை பார்த்துவிட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அந்தப் படத்தில் நடித்தவர்கள் அனைவரும் நன்றாக நடித்து இருக்கின்றனர். சந்தோஷம், நிம்மதி, துக்கம் எல்லாம் இருக்கிறது. காமம், ரத்தம், வன்முறை எதுவும் இல்லாமல் இருக்கிறது. விட்டுக் கொடுப்பது எவ்வளவு சந்தோஷம் என்பதையும் ஈகோ இல்லாமல் வாழ்வது எவ்வளவு நல்ல விஷயம் என்பதையும் மிகவும் எளிமையாக சொல்லி இருக்கிறார்கள். எந்த இடத்திலும் தொய்வு இல்லாமல் ஒவ்வொரு காட்சியும் எதிர்பார்க்கின்ற மாதிரி எடுத்திருக்க ஒரு படம். நல்ல படத்தை யாரும் மிஸ் பண்ண கூடாது என்று சொல்கிறேன். கண்டிப்பாக படத்தை பாருங்கள் சந்தோஷமாக வாருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான வீடியோவை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனமும் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

MUST READ