- Advertisement -
பீஸ்ட் படத்தில் நடித்து புகழ்பெற்ற பிரபல மலையாள நடிகை அபர்ணா தாஸூக்கு நாளை திருமணம் நடைபெற உள்ளது.

மலையாளத்தில் ஞான் பிரகாசன் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அபர்ணா தாஸ். தொடர்ந்து மனோகரம் என்ற திரைப்படத்தில் நடித்தார். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து தமிழில் பீஸ்ட் படத்தில் விஜய்யுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இத்திரைப்படம் அபர்ணாவை தமிழில் மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது.


இதைத் தொடர்ந்து கவின் நடித்த டாடா படத்தில் கதாநாயகியாக நடித்தார். இத்திரைப்படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வௌிப்படுத்திய அபர்ணாவை, ரசிகர்கள் கொண்டாடினர். அதுமட்டுமன்றி டாடா படம் ஹிட் அடிக்கவே, படத்தில் நடித்த கவினும், அபர்ணாவும் பெரிதும் பாராட்டப்பட்டனர். இதனிடையே நடிகை அபர்ணா தாஸூம், பிரபல மலையாள நடிகர் தீபக் பரம்போலும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்பட்டது. முன்னதாக மனோகரம் திரைப்படத்தில் இருவரும் ஒன்றாக இணைந்து நடித்தனர். அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த மஞ்சுமல் பாய்ஸ் படத்திலும் இவர் நடித்திருந்தார்.



