நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஸ்டார் நடிகராக வலம் வருகிறார். இவர் தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் கேரளாவிலும் ஏராளமான ரசிகர்களை தன்வசம் வைத்துள்ளார். இவரது நடிப்பில் கடைசியாக கோட் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கிட்டத்தட்ட 430க்கும் கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. இதற்கிடையில் விஜய், தனது அரசியல் பிரவேசத்தை தொடங்கியுள்ளதால் தளபதி 69 படத்திற்கு பிறகு முழு நேர அரசியல்வாதியாக மாற உள்ளார் விஜய். அதன்படி தளபதி 69 திரைப்படத்தின் படப்பிடிப்புகள் ஒரு பக்கம் நடந்து வந்தாலும், மற்றொரு பக்கம் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஏற்றவாறு அரசியல் தொடர்பான வேலைகளும் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் தான் நாளை மறுநாள் (அக்டோபர் 27) விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற இருக்கிறது. அதற்கான முழு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக நேற்று (அக்டோபர் 24) கொரட்டூர் சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜையும் நடைபெற்றது. இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் தள பக்கத்தில் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
Anna @actorvijay wishing you all the best for the massive journey ahead! You’ve always been an inspiration to us all. Here’s a little something from us to you. @tvkvijayhq #TheGreatestOfAllTime pic.twitter.com/3ywpJtyMUm
— venkat prabhu (@vp_offl) October 24, 2024
அந்த பதிவில், “விஜய் அண்ணா, நீங்கள் முன்னோக்கி செல்லும் நீண்ட நெடிய பயணத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள். எப்போதும் நீங்கள் எங்கள் அனைவருக்கும் ஒரு உத்வேகமாக இருந்தீர்கள். உங்களுக்காக எங்களிடமிருந்து ஒரு சிறிய விஷயம்” என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கோட் படத்தின் பூஜை முதல் படப்பிடிப்புகளில் எடுக்கப்பட்ட வீடியோக்களை ஒன்றாக இணைத்து ஸ்பெஷலாக வீடியோவாக வெளியிட்டு விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் வெங்கட் பிரபு.