கலை , அரசியல், அறிவுலகம் குறித்த தீர்க்கமான சிந்தனையாளர் நடிகர் ராஜேஷ் மறைவு குறித்து கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளாா்.நடிகர் ராஜேஷ் 1949-ல் ஆண்டு டிசம்பர் மாதம் 20-ம் தேதி மன்னார்குடியில் பிறந்தார். தமிழ் சினிமாவில் 1974-ல் அவள் ஒரு தொடர்கதை மூலம் தனது திரைப்பயனத்ததை தொடங்கிய நடிகர் ராஜேஷ், அந்த 7 நாட்கள், கன்னிபருவத்திலே, அச்சமில்லை அச்சமில்லை, வானமே எல்லை, சின்ன ஜெமின், பொன்னுமனி, ஜெய்ஹிந்த், மகாநதி உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளாா். சிறந்த குணச்சித்திர நடிகராகவும், பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து புகழ் பெற்றவர். 75 வயதான பரபல நடிகர் ராஜேஷ் சென்னையில் உடல் நலக்குறைவின் காரணமாக காலமானார். இவரது மறைவுக்கு பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மரணம் இயற்கை எனினும் இயல்பாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. நடிகர் ராஜேஷின் உயிர் கலையமைதி கொள்ளட்டும் என கவிஞர் வைரமுத்து தனது வலைதள பக்கதில் பதிவிட்டுள்ள பதிவில்,
