Homeசெய்திகள்சினிமாஒட்டுமொத்த தெலுங்கு திரையுலகையும் வளைத்துப்போட்ட நெட்பிளிக்ஸ்

ஒட்டுமொத்த தெலுங்கு திரையுலகையும் வளைத்துப்போட்ட நெட்பிளிக்ஸ்

-

ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என விசில் சத்தம், ஆரவாரத்துடன் திரையரங்குகளில் கோலாகலமாக திரைப்படங்களை பார்த்து ரசித்த ரசிகர்களின் கவனத்தை, கொரோனா காலத்தில் தன் பக்கம் திருப்பியது ஓடிடி தளங்கள். திரையரங்குகள் அனைத்து அடைத்துவைக்கப்பட்ட போது, மக்களின் நேரத்தை கழிக்க உதவிய நிறுவனங்கள் ஓடிடி தளங்கள். நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார், ஜீ5 என பல தரப்பட்ட தளங்களில் பல தரப்பட்ட திரைப்படங்களையும், இணைய தொடர்களையும் கண்டு ரசிக்க தொடங்கினர் மக்கள். ஓடிடி தளங்களில் முக்கியமான ஒன்று நெட்பிளிக்ஸ்.

அந்த வகையில் பொங்கலை முன்னிட்டு நெட்பிளிக்ஸ் நிறுவனம் மாபெரும் அதிரிபுதிரி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சுமார் 10-க்கும் மேற்பட்ட தெலுங்கு திரைப்படங்களின் திரையரங்க வெளியீட்டுக்கான உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. அதில் அனைத்துமே தெலுங்கு படங்கள் மட்டுமே. அதன் பட்டியலையும் ஓடிடி தளம் பகிர்ந்துள்ளது.

பிரபாஸ் மற்றும் பிருத்விராஜ் நடித்துள்ள சலார், அல்லு அர்ஜூன் நடிக்கும் புஷ்பா பாகம் 2, தேவரா புட்டி கேங்ஸ் ஆஃப் கோதாவரி, நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் மங்கோ மாஸ் தில்லு ஸ்கொயர், ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. மேலும், ஜூனியர் என்டிஆர் நடிக்கும் தேவரா, விஜய் தேவரகொணடா நடிக்கும் 12-வது திரைப்படமும் இதில் இணைந்துள்ளது.

MUST READ