Homeசெய்திகள்சினிமா'ஆபரேஷன் சிந்தூர்' பட அறிவிப்பு.... மன்னிப்பு கோரிய இயக்குனர்!

‘ஆபரேஷன் சிந்தூர்’ பட அறிவிப்பு…. மன்னிப்பு கோரிய இயக்குனர்!

-

- Advertisement -

ஆபரேஷன் சிந்தூர் பட அறிவிப்பை வெளியிட்டதற்காக இயக்குனர் மன்னிப்பு கேட்டுள்ளார்.'ஆபரேஷன் சிந்தூர்' பட அறிவிப்பு.... மன்னிப்பு கோரிய இயக்குனர்!

காஷ்மீரில் உள்ள பஹல்காமில் சுற்றுலா பயணிகளின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக இந்திய ராணுவம், பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது. அந்த வகையில் இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் பாகிஸ்தானும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. ஆனால் இந்திய ராணுவம் அதனை முறியடித்து வருகிறது. இவ்வாறு இந்தியா – பாகிஸ்தான் இடையில் மோதல் ஏற்படுவதன் காரணமாக எல்லைப்பகுதியில் பதற்றம் அதிகரித்திருக்கிறது. இந்த நிலையில் தான் ஆபரேஷன் சிந்தூர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சில மணி நேரங்களிலேயே சமூக வலைதளங்களில் இருந்து நீக்கப்பட்டது. 'ஆபரேஷன் சிந்தூர்' பட அறிவிப்பு.... மன்னிப்பு கோரிய இயக்குனர்!அதாவது இந்த அறிவிப்பை உத்தம் மகேஸ்வரி என்பவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அந்தப் போஸ்டரில் நிக்கி விக்கி பாக்னானி ஃபிலிம்ஸ் நிறுவனமும், தி கன்டென்ட் இன்ஜினியர் நிறுவனமும் இணைந்து தயாரிப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அந்த போஸ்டரின் முகம் காட்டப்படாத பெண் ராணுவ அதிகாரி ஒருவர் நெற்றியில் சிந்தூர் வைப்பது போன்று காட்டப்பட்டிருந்தது. இந்த போஸ்டர் எதிர்பார்ப்பை அதிகப்படுத்திய நிலையில், இதற்கு எதிராக பல விமர்சனங்களும் கிளம்பியுள்ளது. பொதுமக்கள் பதற்றத்தில் இருக்கும் இந்த நிலையை சாதமாக பயன்படுத்தி அதன் மூலம் லாபம் பெற விரும்புகின்றனர் என பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக இப்படத்தின் அறிவிப்பை வெளியிட்ட உத்தம் மகேஸ்வரி மன்னிப்பு கோரி உள்ளார்.'ஆபரேஷன் சிந்தூர்' பட அறிவிப்பு.... மன்னிப்பு கோரிய இயக்குனர்! அதன்படி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக நான் வெளியிட்ட அறிவிப்பு குறித்து மன்னிப்பு கேட்கிறேன். யாருடைய உணர்வுகளையும் புண்படுத்துவது எங்கள் நோக்கம் இல்லை. ஒரு இயக்குனராக நமது ராணுவ வீரர்களின் தியாகம், தைரியம், வலிமை ஆகியவற்றால் நெகிழ்ச்சி அடைந்தேன். எனவே இதனை திரைக்கு கொண்டுவர விரும்பினேன். இது நமது தேசத்தின் மீதான ஆழ்ந்த மரியாதை மற்றும் அன்பில் இருந்து வந்தது. புகழுக்காகவோ, பணத்திற்காகவோ இல்லை. இந்த படம் குறித்து அறிவித்த நேரம் சிலருக்கு வலியையோ, அசௌகரியத்தையோ ஏற்படுத்தி இருந்தால் அதற்கு நான் மிகவும் வருந்துகிறேன். எல்லையில் போராடும் வீரர்கள் மற்றும் தியாகிகளின் குடும்பத்திற்காக எங்கள் அன்பும், வேண்டுதலும் எப்போதும் இருக்கும்” என்று குறிப்பிட்டு பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

MUST READ