spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமனதை தொட்ட படம்.... 'டூரிஸ்ட் ஃபேமிலி' பட இயக்குனரை பாராட்டிய பிரம்மாண்ட இயக்குனர்!

மனதை தொட்ட படம்…. ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ பட இயக்குனரை பாராட்டிய பிரம்மாண்ட இயக்குனர்!

-

- Advertisement -

பிரம்மாண்ட இயக்குனர் டூரிஸ்ட் ஃபேமிலி பட இயக்குனரை பாராட்டியுள்ளார்.மனதை தொட்ட படம்.... 'டூரிஸ்ட் ஃபேமிலி' பட இயக்குனரை பாராட்டிய பிரம்மாண்ட இயக்குனர்!

கடந்த மே 1ம் தேதி சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், மிதுன், கமலேஷ் ஆகியோரின் நடிப்பில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் வெளியானது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியிருந்தார். குட் நைட், லவ்வர் ஆகிய வெற்றி படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். அரவிந்த் விஸ்வநாதன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருந்தார். பொருளாதார கஷ்டத்தினால் இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் ஒரு குடும்பம் தங்களின் கஷ்டங்களை மறைத்து, பல சிக்கல்களைக் கடந்து புதிய வாழ்க்கையை எப்படி தொடங்குகிறது என்பதை பின்னணியாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டிருந்தது. வெளியான முதல் நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வரும் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் நாளுக்கு நாள் வசூலையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 50 கோடியை கடந்து இருப்பதாகவும் உலக அளவில் ரூ. 75 கோடியை கடந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் அபிஷன் ஜீவிந்தை, இயக்குனர் ராஜமௌலி பாராட்டியுள்ளார்.

we-r-hiring

அதன்படி அவர் வெளியிட்டுள்ள பதிவில், “டூரிஸ்ட் ஃபேமிலி எனும் அற்புதமான திரைப்படத்தை பார்த்தேன். மனதுக்கு நிறைவாக இருந்தது. அதேசமயம் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவையும் இருந்தது. ஆரம்பம் முதல் இறுதி வரை என்னை ஆர்வத்துடன் வைத்திருந்தது. அபிஷன் ஜீவிந்தின் எழுத்து, இயக்கம் மிகவும் அருமை. சமீபத்திய ஆண்டுகளில் மிகச்சிறந்த சினிமா அனுபவத்தை தந்த டூரிஸ்ட் பேமிலி படத்தை தவற விடாதீர்கள்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

அதற்கு அபிஷன் ஜீவிந்த், “இப்பொழுதும் இதை என்னால் நம்ப முடியவில்லை. மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நிறைந்த அவருடைய படங்களை பார்த்திருக்கிறேன். பிரம்மாண்டமான உலகங்களை உருவாக்கியவர் என்னுடைய பெயரை ஒருநாள் உச்சரிப்பார் என்று கற்பனை கூட செய்து பார்க்கவில்லை. நீங்கள் இந்த இளைஞனின் கனவை, வாழ்க்கையை விட பெரிதாக மாற்றிவிட்டீர்கள்” என்று நெகிழ்ச்சி பதிவினை வெளியிட்டுள்ளார்.

MUST READ