டிராகன் படம் குறித்து இயக்குனர் சங்கர் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி திரைக்கு வந்த படம் தான் டிராகன். இந்த படத்தை ஓ மை கடவுளே படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கியிருந்தார். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க லியோன் ஜேம்ஸ் இதற்கு இசை அமைத்திருந்தார். இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து அனுபமா, கயடு லோஹர், மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படம் வெளியான முதல் நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதே சமயம் வசூல் ரீதியாகவும் வெற்றிப்பாதையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இயக்குனர் சங்கர், டிராகன் படம் குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
#DRAGON A beautiful movie. Excellent writing- hats off to @Dir_Ashwath . All characters have a beautiful and complete journey. @pradeeponelife showed us again that he’s a terrific entertainer and proved that he is a strong, soulful performer as well. @DirectorMysskin ,…
— Shankar Shanmugham (@shankarshanmugh) February 23, 2025

அந்த பதிவில், “டிராகன் திரைப்படம் அருமையான படம். அஸ்வத் மாரிமுத்து படத்தை அருமையாக எழுதியுள்ளார். அனைத்து கதாபாத்திரங்களும் அழகாகவும் முழுமையாகவும் பயணித்துள்ளன. பிரதீப் ரங்கநாதன் ஒரு அற்புதமான பொழுதுபோக்காளர் என்பதை மீண்டும் எங்களுக்கு காட்டியுள்ளார். மேலும் அவர் வலுவான, ஆத்மார்த்தமான நடிகர் என்பதை நிரூபித்துள்ளார். மிஸ்கின், அனுபமா மற்றும் ஜார்ஜ் மரியான் ஆகியோர் அருமையாக நடித்துள்ளனர். இந்த படத்தின் கடைசி 20 நிமிடங்கள் எனக்கு கண்ணீரை வரவழைத்தது. இந்த படம் அழுத்தமான கருத்தை சொல்லி இருக்கிறது. தயாரிப்பு நிறுவனம் மற்றும் படக்குழுவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.