இயக்குனர் சங்கர் தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்று பலராலும் அழைக்கப்படுபவர். அதாவது இயக்குனர் சங்கர் தனது ஒவ்வொரு படங்களிலும் பிரம்மாண்டத்தை கொண்டு வருவார். அதன்படி இவருடைய படங்களில் இடம் பெற்ற பாடல்கள் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டிருக்கும். அது அனைத்து ரசிகர்களையும் வெகுவாக கவரும். இவ்வாறு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ள இயக்குனர் சங்கர் திரைத்துறையில் தனக்கென தனி ஒரு அடையாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். இவரது இயக்கத்தில் வெளியான அந்நியன் முதல்வன், இந்தியன், சிவாஜி, எந்திரன், நண்பன் ஆகிய பெரும்பாலான படங்கள் வெற்றி படங்களாகவே அமைந்தன. இருப்பினும் கடந்த ஆண்டு வெளியான இந்தியன் 2 திரைப்படம் இயக்குனர் சங்கருக்கு பெரும் தோல்வியை தந்தது. அதே சமயம் இவரது இயக்கத்தில் கேம் சேஞ்ஜர் எனும் திரைப்படமும் உருவாகி இருக்கும் நிலையில் இப்படம் நாளை (ஜனவரி 10) உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இதைத் தொடர்ந்து இயக்குனர் சங்கர் இந்தியன் 3 படத்தில் கவனம் செலுத்த உள்ளார். மேலும் இவர், பிரபல எழுத்தாளர் சு. வெங்கடேசன் எழுதிய வேள்பாரி என்ற நாவலை தழுவி படம் இயக்கப் போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.
அதன்படி இந்த படமானது மூன்று பாகங்களாக உருவாக இருக்கிறது எனவும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. இந்நிலையில் இயக்குனர் சங்கர், இது குறித்து சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசி உள்ளார். அதில், “வேள்பாரி என் கனவு திட்டம். இதுவரை நான் வரலாற்று படங்களை இயக்கியது இல்லை. அது எந்திரன் படத்தை போல் என்னை உற்சாகப்படுத்துகிறது. நான் எந்திரன் படம் இயக்கும்போது எனக்கு எல்லாமே புதிதாக இருந்தது. அதுவே என் உந்த சக்தி. என் மனம் இப்போது வேள்பாரியை நோக்கி பயணிக்கிறது. இந்த படம் மூன்று பாகங்களாக உருவாகும். இதன் திரைக்கதை பணிகள் முடிந்துவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.
- Advertisement -