spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவசூல் மழையில் நனையும் 'டியூட்' .... தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!

வசூல் மழையில் நனையும் ‘டியூட்’ …. தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!

-

- Advertisement -

டியூட் படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.வசூல் மழையில் நனையும் 'டியூட்' .... தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!

பிரதீப் ரங்கநாதனின் 4வது படமாக உருவாகியிருந்த டியூட் திரைப்படம் கடந்த அக்டோபர் 17ஆம் தேதி தீபாவளி தினத்தை முன்னிட்டு திரைக்கு கொண்டுவரப்பட்டது. ஏற்கனவே பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான லவ் டுடே, டிராகன் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படமும் ரசிகர்களைக் கவரும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன், ஃபுல் எனர்ஜியுடன் களமிறங்கி அனைவரையும் ஆச்சரியபடுத்தி உள்ளார். அதே சமயம் சரத்குமார், மமிதா பைஜுவும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர். சாய் அபியங்கரின் இசை படத்திற்கு பிளஸ் பாயிண்ட்டாக அமைந்துள்ளது. இருப்பினும் கீர்த்தீஸ்வரனின் திரைக்கதை இன்னும் வலுவாக அமைக்கப்பட்டிருக்கலாம் என்று சில ரசிகர்கள் இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். வசூல் மழையில் நனையும் 'டியூட்' .... தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!இந்நிலையில் இந்த படம் வெளியான முதல் நான்கு நாட்களில் உலகம் முழுவதும் ரூ.83 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருக்கிறது என இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இனிவரும் நாட்களிலும் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

we-r-hiring

ஏற்கனவே பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான லவ் டுடே, டிராகன் ஆகிய படங்கள் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த நிலையில், டியூட் திரைப்படம் அதைவிட அதிகமாக வசூல் செய்யும் என்று நம்பப்படுகிறது.

MUST READ