டியூட், பைசன், டீசல் ஆகிய படங்களின் முதல் நாள் வசூல் விவரங்கள் வெளியாகி உள்ளது.
பிரதீப் ரங்கநாதனின் 4வது படமாக உருவாகியிருந்த ‘டியூட்’ திரைப்படம் நேற்று (அக்டோபர் 17) உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. கீர்த்திஸ்வரனின் இயக்கத்திலும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் இப்படம் உருவாகி இருந்தது. சாய் அபியங்கர் இதற்கு இசை அமைக்க, நிகேத் பொம்மி இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருந்தார். மமிதா பைஜூ, சரத்குமார், ரோகிணி ஆகியோரும் இப்படத்தில் நடித்திருந்தனர். காதல், காமெடி, எமோஷனல், ஆக்சன் என ஒரு பக்கா கமர்சியல் என்டர்டெயினர் படமாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. அந்த வகையில் இப்படம் இந்திய அளவில் முதல் நாளில் மட்டும் ரூ.10 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் நேற்று துருவ் விக்ரம் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘பைசன்’ திரைப்படம் இந்திய அளவில் ரூ. 2 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதாகவும், ஹரிஷ் கல்யாண் – சண்முகம் முத்துசாமி கூட்டணியில் வெளியான ‘டீசல்’ திரைப்படம் இந்திய அளவில் ரூ. 25 லட்சத்திற்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது எனவும் சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.
பைசன் திரைப்படம் கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது என்பதும் டீசல் திரைப்படம் கச்சா எண்ணெய் – அரசியல் பற்றி பேசும் படமாக வெளிவந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.