Homeசெய்திகள்சினிமாஇது அடுத்த லெவல்… சூர்யா, சுதா கொங்கரா கூட்டணியில் இணையும் பான் இந்தியா ஸ்டார்!

இது அடுத்த லெவல்… சூர்யா, சுதா கொங்கரா கூட்டணியில் இணையும் பான் இந்தியா ஸ்டார்!

-

- Advertisement -

சூர்யா மற்றும் சுதா கொங்குரா கூட்டணியில் உருவாக இருக்கும் புதிய படத்தில் பான் இந்தியா ஸ்டார் ஒருவர் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக மாறியிருக்கிறார் சுதா கொங்கரா. அவர் இயக்கத்தில் வெளியான இறுதி சுற்று, சூரரைப் போற்று உள்ளிட்ட படங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. சூரரைப் போற்று படத்தின் பெரும் வெற்றியை அடுத்து சுதா கொங்கரா மற்றும் சூர்யா கூட்டணி மீண்டும் புதிய படத்தில் இணைய உள்ளனர். இந்த படமும் பயோபிக் படமாக உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்தப் படத்தில் பான் இந்தியா ஸ்டார் நடிகர் ஒருவர் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆம், துல்கர் சல்மான் இந்தப் படத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த செய்தியை கேட்டு கோலிவுட் சினிமா வட்டாரம் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளது. இரு பெரும் நடிகர்கள் இணைவதால் படம் ரசிகர்களுக்கு பெரும் ட்ரீட் ஆக இருக்கும் என்று இப்போவே எதிர்பார்ப்பு எகிறத் துவங்கியுள்ளது.

இதற்கிடையில் சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை அடுத்து அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துல்கர் சல்மான் கிங் ஆப் கோத்தா படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ