SIR ஒழிக்கப்பட வேண்டும் என்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் ஒரு துடைப்பக்கட்டை என நடிகர் மன்சூரலிகான் கடுமையாக விமர்சித்துள்ளாா்.
SIR தொடர்பாக நடிகர் மன்சூரலிகான் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், SIR யை வைத்து அடிமையாக்க நினைக்கின்றனர் என பா.ஜ.க.வை குற்றஞ்சாட்டியுள்ளாா்.

SIR படிவத்தை நிரப்பி கொடுக்க வேண்டும் என தனது வழக்கறிஞரிடம் படிவத்தை கொடுத்த போது, நீங்கள் இரண்டு கொலையை செய்து விட்டு கூட வாருங்கள் நாம் ஜாமீன் வாங்கி விடலாம். ஆனால், இந்த படிவத்தை மட்டும் நிரப்ப சொல்ல வேண்டாம் என கூறியதாக வேடிக்கையுடன் குறிப்பிட்டார்.
SIR ஒழிக்கப்பட வேண்டும் என்றும் தூக்கி எறியப்பட வேண்டும் என்றும் ஆவேசமாக அவர் பேசியுள்ளாா். SIR-ஐ நிறுத்த முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மன்சூரலிகான் கேட்டுக் கொண்டார்.
நேற்று வந்த வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு ஓட்டை கொடுத்துவிட்டு போய் விடுவீர்கள்…நாங்கள் என்ன சொம்பைங்களா? என்று தேர்தல் ஆணையத்தை கேள்வி எழுப்பிய மன்சூரலிகான், மத்திய அரசை சேர்ந்த யாரும் தமிழ்நாட்டுக்குள் வர முடியாது என தேர்தல் ஆணையத்திற்கு எச்சரிக்கை விடுப்பதாக தெரிவித்துள்ளாா்.
தமிழ்நாட்டில் போராட்டம் வெடிக்க வேண்டும் என்றும் (EVM) மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் ஒரு துடைப்பக்கட்டை என்றும் மன்சூரலிகான் விமர்சித்துள்ளாா்.
மக்களை ஏமாற்றி வெற்றிபெறும் பாஜக என்ன பெரிய வெங்காயமா? என்றும் பாஜகவை ஆதரிக்கும் கட்சிகள் அனைத்தும் ஃபாசிச கட்சிகள் என்றும் அவர் குறை கூறியுள்ளாா்.
திமுகவை இத்தனை காலம் எதிர்த்து வந்ததாகவும் ஆனால், திமுக தான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் கூறிய மன்சூரலிகான், திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவிருப்பதாகவும் தெரிவித்துள்ளாா்.
ஆதாரத்தை வெளியிட்ட PTR! அதிர்ச்சியில் தேர்தல் ஆணையம்! SIRல் நடக்கும் தில்லு முல்லு!
