spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅஜித் நலமுடன் இருக்கிறார்..... ரேஸிங் அணி வீரர் ஃபேபியன் டுபியக்ஸ் வெளியிட்ட பதிவு!

அஜித் நலமுடன் இருக்கிறார்….. ரேஸிங் அணி வீரர் ஃபேபியன் டுபியக்ஸ் வெளியிட்ட பதிவு!

-

- Advertisement -

நடிகர் அஜித் நலமுடன் இருக்கிறார் என ரேஸிங் அணி வீரர் ஃபேபியன் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.அஜித் நலமுடன் இருக்கிறார்..... ரேஸிங் அணி வீரர் ஃபேபியன் டுபியக்ஸ் வெளியிட்ட பதிவு!

நடிகர் அஜித் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களின் படப்பிடிப்புகளையும் டப்பிங் பணிகளையும் முடித்துவிட்டு கார் ரேஸிங்கில் கலந்து கொள்வதற்காக துபாய் சென்றுள்ளார். இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ள பந்தயத்தில் கலந்து கொள்ள தயாராகி வருகிறார் அஜித். அதன்படி நேற்று (ஜனவரி 7) நடிகர் அஜித் ரேஸிங் பயிற்சியில் ஈடுபட்டபோது அவருடைய கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவர் ஒன்றில் மோதி வேகமாக சுழன்று நின்றது. இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக பரவி அஜித் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரேஸிங்கில் இதுபோன்ற விபத்துக்கள் மிகவும் சாதாரணமானதாக இருந்தாலும் கூட அந்த வீடியோவை பார்த்த பலரும் ஒரு நிமிடம் உறைந்து போயினர். அதன் பின்னர் அந்த வீடியோவில் நடிகர் அஜித் எந்தவித காயமும் இல்லாமல் காரில் இருந்து வெளியேறும் காட்சியை பார்த்த பின்னர் தான் ரசிகர்களுக்கு நிம்மதி கிடைத்தது. இருப்பினும் நடிகர் அஜித் கவனமாக இருக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இது தொடர்பாக அஜித் குமார் ரேஸிங் அணியின் மேலாளர் ஃபேபியன் டுபியக்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Fabian Duffieux (@fdx89)

we-r-hiring

அந்த பதிவில், “முதல் நாள் சோதனை முடிந்தது. அஜித் எந்தவித கீறலும் இல்லாமல் நலமுடன் இருக்கிறார். அதுதான் முக்கியமானது. கற்றுக் கொள்வதற்கான பயணம் என்றுமே முடியாது என்பதற்கான நினைவூட்டல் தான் இன்று நடந்திருக்கிறது. தடைகள் எதுவாக இருந்தாலும் ரேஸிங் மீதான எங்களின் ஆர்வம் ஒவ்வொரு அனுபவத்திலிருந்தும் கற்றுக் கொள்ளவும் தொடர்ந்து நாங்கள் முன்னேறவும் தூண்டுகிறது. இந்தப் பாதையானது பாடங்கள் நிறைந்தது. அதனை எதிர்கொள்ள நாங்கள் ஒரு அணியாகவும் குடும்பமாகவும் தயாராக இருக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ