Homeசெய்திகள்சினிமாஅல்லு அர்ஜுனுடன் மோதும் பஹத் பாசில்.... விரைவில் வெளியாகும் 'புஷ்பா 2' ட்ரெய்லர்!

அல்லு அர்ஜுனுடன் மோதும் பஹத் பாசில்…. விரைவில் வெளியாகும் ‘புஷ்பா 2’ ட்ரெய்லர்!

-

- Advertisement -
kadalkanni

விரைவில் புஷ்பா 2 ட்ரைலர் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு புஷ்பா எனும் திரைப்படம் வெளியானது.அல்லு அர்ஜுனுடன் மோதும் பஹத் பாசில்.... விரைவில் வெளியாகும் 'புஷ்பா 2' ட்ரெய்லர்! புஷ்பா தி ரைஸ் என்று தலைப்பு வைக்கப்பட்டிருந்த இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனாவும் வில்லனாக பகத் பாசிலும் நடித்திருந்தனர். சுகுமார் இயக்கியிருந்த இந்தப் படம் பிரம்மாண்ட வெற்றி கண்டது. அதைத் தொடர்ந்து சுகுமார், புஷ்பா 2 என்று சொல்லப்படும் புஷ்பா தி ரூல் எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே தொடங்கப்பட்ட நிலையில் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளதாக சொல்லப்படுகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையிலும் இந்த படம் உருவாகி வருகிறது. மேலும் இந்த படமானது வருகின்ற டிசம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த பாடல்களும் டீசரும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன. அல்லு அர்ஜுனுடன் மோதும் பஹத் பாசில்.... விரைவில் வெளியாகும் 'புஷ்பா 2' ட்ரெய்லர்!ஆகவே திரைப்படம் வெளியாவதற்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் விரைவில் வெளியாகும் என படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அந்த போஸ்டரில் அல்லு அர்ஜுன், பஹத் பாசில் ஆகிய இருவரும் மோதுவது போன்று காண்பிக்கப்பட்டுள்ளது. எனவே டிரைலரிலும் இருவரும் மோதும் காட்சிகள் இடம் பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி உள்ளது. இனிவரும் நாட்களில் ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என நம்பப்படுகிறது.

MUST READ