- Advertisement -
பிரபல இந்தி நடிகையும், பாடகியுமான மல்லிகா ராஜ்புத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
உ,பி. மாநிலத்தைச் சேர்ந்தவர் மல்லிகா ராஜ்புத் என்று அழைக்கப்படும் விஜயலட்சுமி ஆவார். இவர், கதக் நடனக்கலைஞரும், எழுத்தாளரும் ஆவார். கடந்த 2014-ம் ஆண்டு கங்கனா ரணாவத் நடிப்பில் வெளியான ரிவால்வர் ராணி படத்தில் இவர் முக்கிய வேடத்தில் நடித்து பிரபலம் அடைந்தார் இதைத் தொடர்ந்து பாடகர் ஷானின் யாரா துஜே என்ற பாடலின் இசை வீடியோவிலும் அவர் பங்கேற்றார். அதன் பிறகு பாடல்கள் மட்டுமன்றி நடிப்பு மற்றும் அரசியலிலும் அவர் ஆர்வம் காட்டி வந்தார்.
