எப்படியாவது விஜய்யை பார்த்து விட வேண்டும் – ரஞ்சிதமே ஸ்டைலில் முத்தம் கொடுத்த பெட்ரோல் பங்க் மாற்றுத்திறனாளி ஊழியரின் வீடியோ வைரல்
நடிகர் விஜய் தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் “லியோ” படத்தில் நடித்து வருகிறார். இவர்களின் முந்தைய படமான மாஸ்டர் படத்தில் பவானி கதாபாத்திரத்தில் மாஸ்டர் மகேந்திரன் நடித்திருந்தார்.
மகேந்திரன் நேற்று அவருக்கு ஏற்கனவே பரிட்சையமான பெட்ரோல் பங்க் ஊழியர் ஒருவரை சந்தித்து, அவரிடம் உங்களுக்கு விஜய்யை எவ்வளவு பிடிக்கும் என கேட்கிறார். அதற்கு அவர் ரொம்ப அதிகமாக பிடிக்கும் என கூறி அவரது செல்போன் பின்பக்கம் உள்ள விஜய்யின் புகைப்படத்தை காட்டுகிறார். அதில் “அன்புக்கு ஆயிரம் அர்த்தங்கள் இருக்கலாம் நாங்கள் கண்ட முதல் அர்த்தம் தளபதி” என எழுதி விஜயின் புகைப்படம் இருந்தது.
மேலும் இதுவரை அவரை பார்க்கவே முடியவில்லை என்று வருத்தப்பட்டு பேசினார். எப்படியாவது அவரை பார்க்க வேண்டும் என ஆசையுடன் கூறினார். அதற்கு மாஸ்டர் மகேந்திரன், நடிகர் விஜய்யிடம் வீடியோ வாயிலாக கோரிக்கை வைத்தார்.
உடனே அந்த பெட்ரோல் பங்க் ஊழியர், வாரிசு பட ரஞ்சிதமே ஸ்டைலில் முத்தம் கொடுத்தார். இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.