spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஜி.வி. பிரகாஷ் - சைந்தவி விவாகரத்து.... ஒரே காரில் வந்து நீதிமன்றத்தில் ஆஜர்!

ஜி.வி. பிரகாஷ் – சைந்தவி விவாகரத்து…. ஒரே காரில் வந்து நீதிமன்றத்தில் ஆஜர்!

-

- Advertisement -

ஜி.வி. பிரகாஷ் – சைந்தவி இருவரும் ஒரே காரில் நீதிமன்றத்திற்கு வந்து விவாகரத்து கோரினர்.ஜி.வி. பிரகாஷ் - சைந்தவி விவாகரத்து.... ஒரே காரில் வந்து நீதிமன்றத்தில் ஆஜர்!தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும், பாடகராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் ஜி.வி. பிரகாஷ். இவரும், பிரபல பாடகி சைந்தவியும் பள்ளி பருவத்தில் இருந்தே காதலித்து வந்தனர். அதன்படி பெற்றோரின் சம்மதத்துடன் கடந்த 2013ல் திருமணமும் செய்து கொண்டனர். இவர்கள் இருவருக்கும் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. இதற்கிடையில் இவர்கள் இருவரும் இணைந்து பாடிய பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து ரசிகர்களின் ஃபேவரைட் பாடல்களாக அமைந்துள்ளது. இந்நிலையில் தான் திடீரென ஜி.வி. பிரகாஷ் – சைந்தவி ஆகிய இருவரும் தங்களின் திருமண உறவில் இருந்து பிரிந்து கொள்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இந்த தகவல் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஜி.வி. பிரகாஷ் - சைந்தவி விவாகரத்து.... ஒரே காரில் வந்து நீதிமன்றத்தில் ஆஜர்!அடுத்தது நடிகை சைந்தவி – ஜி.வி. பிரகாஷ் இருவரும் திருமண உறவிலிருந்து பிரிந்தாலும் இன்னும் நண்பர்களாக தான் இருக்கிறோம் என பல பேட்டிகளில் கூறியிருந்தனர். இந்நிலையில் ஜி.வி. பிரகாஷ் – சைந்தவி இருவரும் ஏற்கனவே சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்து இருந்த நிலையில் இன்று (மார்ச் 24) இருவருமே நீதிமன்றத்திற்கு ஒரே காரில் வந்து ஆஜராகி உள்ளனர். இது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

MUST READ