Homeசெய்திகள்சினிமா'கேம் சேஞ்சர்' படத்திலிருந்து 'ரா மச்சா மச்சா' பாடல் வெளியீடு!

‘கேம் சேஞ்சர்’ படத்திலிருந்து ‘ரா மச்சா மச்சா’ பாடல் வெளியீடு!

-

- Advertisement -

கேம் சேஞ்சர் படத்திலிருந்து ரா மச்சா மச்சா பாடல் வெளியாகியுள்ளது.'கேம் சேஞ்சர்' படத்திலிருந்து 'ரா மச்சா மச்சா' பாடல் வெளியீடு!

ராம்சரண் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் கேம் சேஞ்சர். இந்த படத்தினை பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படும் சங்கர் இயக்கி இருக்கிறார். இதனை ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். திருநாவுக்கரசு இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இந்த படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக கியரா அத்வானி நடித்திருக்கிறார். படத்தில் வில்லனாக எஸ் ஜே சூர்யா நடித்துள்ளார். மேலும் அஞ்சலி, ஜெயராம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். அரசியல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் தற்போது படக்குழுவினர் அடுத்தடுத்த பாடல்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் ஏற்கனவே ஜரகண்டி எனும் பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வந்தது. அதைத்தொடர்ந்து தற்போது ரா மச்சா மச்சா எனும் இரண்டாவது பாடல் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

மேலும் இப்படமானது வருகின்ற டிசம்பர் 20ஆம் தேதி கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு திரைக்கு வரும் என்று சமூக வலைதளங்களில் தொடர்ந்து செய்திகள் பரவி வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியிருக்கும் இந்த பாடலை தமிழில் நாகாஷ் ஆஷிஷ் பாடியுள்ள நிலையில் விவேக் பாடல் வரிகளை எழுதி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ