இயக்குனர் வெங்கட் பிரபு தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர். இவரது இயக்கத்தில் கடைசியாக கஸ்டடி எனும் திரைப்படம் வெளியானது. அடுத்ததாக இவர் விஜய் நடிப்பில் கோட் (GOAT) என்று சொல்லப்படும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் எனும் திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். இதில் விஜய் இரட்டை வேடங்களில் மிரட்டி இருக்கும் நிலையில் தளபதியையும் இளைய தளபதியையும் ஒரே திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதன்படி இத்திரைப்படமும் வருகின்ற செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. ஏற்கனவே படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து தற்போது ப்ரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு, “கோட் படம் ரசிகர்களுக்கு தளபதி திருவிழாவாக இருக்கும். நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்களோ அதைவிட அதிகமாக படத்தில் இருக்கும். இன்னும் சில நாட்களில் படத்திலிருந்து செம பாடல் வெளியாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
எனவே இந்த பாடலானது நடிகர் விஜய் மற்றும் நடிகை திரிஷா ஆகியோருக்குமான குத்து பாடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.