Homeசெய்திகள்சினிமாகிட்டாரிஸ்ட் சந்திரசேகர் மறைவு - இளையராஜா இரங்கல்

கிட்டாரிஸ்ட் சந்திரசேகர் மறைவு – இளையராஜா இரங்கல்

-

கிட்டாரிஸ்ட் சந்திரசேகர் மறைவு – இளையராஜா இரங்கல்

கிட்டாரிஸ்ட் சந்திரசேகர் உடல்நலக்குறைவால் மறைவு, இளையராஜா இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியீட்டுள்ளார்.

திரைப்பட பாடல்களுக்கு கிடார் வாசித்த ஆர்.சந்திரசேகர் உடல்நலக்குறைவால் காலமானார். பயணங்கள் முடிவதில்லை படத்தில் இடம் பெற்ற இளையநிலா பொழிகிறதே பாடலில் கிடார் இசை வாசித்து புகழ்பெற்றவர் சந்திரசேகர்.

இவர் இளையராஜாவுக்கு முன்பாக பிரபல இசையமைப்பாளர்கள் கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், சங்கர்-கணேஷ், திவாகர் ஆகியோரிடம் கிடாரிஸ்டாக பணியாற்றியுள்ளார். இப்படி பிரபல கிடாரிஸ்ட் ஆக வலம் வந்த ஆர்.சந்திரசேகர் உயிரிழந்த சம்பவம் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், இசைஞானி இளையராஜா வீடியோ வாயிலாக இரங்கலைத் தெரிவித்திருக்கிறார். அந்த வீடியோவில்,

‘என்னுடன் பணியாற்றிய, எனக்கு மிகப் பிரியமான இசைக் கலைஞரான சந்திரசேகர் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகவும் துயரூட்றேன். அவர் என்னிடம் இருந்த புருஷோத்தமனின் சகோதரர் ஆவார். நாங்கள் எல்லாம் ஒரே நேரத்தில் திரைக்கு வந்த இசைக் கலைஞர்கள். நிறைய பாடல்களுக்கு அவர் வாசித்திருக்கிறார். கிடார் போன்ற இசைக்கருவிகள் மூலம் மக்கள் மத்தியில், மக்கள் நெஞ்சில் நீங்காத இடம் பெற்று இருக்கிறார். அவருடைய ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்’ என்று இளையராஜா தெரிவித்துள்ளார்.

MUST READ