நடிகர் அஜித் கடைசியாக ஹெச். வினோத் இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து அஜித் விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்த இரண்டு படங்களும் அடுத்த ஆண்டில் அடுத்தடுத்து வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. அதே சமயம் அஜித்தை பொறுத்தவரை ஷூட்டிங் இல்லாத சமயங்களில் தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருவதுண்டு. அத்துடன் கார், பைக் எடுத்துக் கொண்டு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா சென்று வருவார். இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் நடிகர் அஜித் தனியாக கார் ரேஸ் அணி ஒன்றை தொடங்கி இருக்கிறார். இது குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. மேலும் இந்த அணி அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 10 மற்றும் 11ஆம் தேதிகளில் துபாயில் நடைபெற இருக்கும் 24H யூரோப் சீரிஸில் கலந்து கொள்ள இருக்கிறது. இந்த அணியின் சார்பில் நடிகர் அஜித் இந்த பந்தயத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்.
இது தொடர்பாக நடிகை ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “கார் ரேஸராக உங்களை மீண்டும் பார்ப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. என்னுடைய வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். ஆகையினால் நடிகர் அஜித் கார் பந்தயத்தில் கலந்து கொள்ள இருக்கும் இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- Advertisement -