நடிகர் ரவியின் புதிய படத்திலிருந்து இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் விலகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.நடிகர் ரவி கடைசியாக கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து நடிகர் ரவி, சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இதற்கிடையில் இவர், ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் தனது 34 வது திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாக இருந்தார். அதன்படி தற்காலிகமாக JR 34 என்ற தலைப்பு வைக்கப்பட்டிருந்த இந்த படம் தொடர்பான அறிவிப்பு ஏற்கனவே வெளியானது. அதன்படி இந்த படத்தை டாடா படத்தின் இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்க போவதாகவும் ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைக்கப் போவதாகவும் அறிவிக்கப்பட்டது.
ஆனால் தற்போது கிடைத்த தகவலின் படி, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாகவும் அவருக்கு பதிலாக ஷாம் சி எஸ் இணைந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த சில தினங்களுக்கு முன்னதாகவே பூஜையுடன் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்தது இந்த படத்தில் ரவியுடன் இணைந்து தவ்தி ஜிவால், பிரதீப் ஆண்டனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -