நடிகர் ரஜினிகாந்த் கடைசியாக கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் வேட்டையன். இந்த படம் வருகின்ற அக்டோபர் 10 அன்று உலகம் முழுவதும் திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதற்கான முழு ஏற்பாடுகளும் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், ராணா டகுபதி, ரித்திகா சிங், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தான் சமீபத்தில் நடந்த பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் பகத் பாசில் குறித்து பேசி உள்ளார்.
அவர் பேசியதாவது, “பகத் பாசில் இந்த படத்தில் சுவாரசியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருடைய கேரக்டர் பற்றி படக்குழு என்னிடம் சொன்னபோது இந்த கேரக்டரில் யாரை நடிக்க வைப்பார்கள் என்று யோசித்தேன். அப்போது இயக்குனர், இதற்காக அதிகம் யோசிக்கவே வேண்டாம் அந்த கேரக்டருக்கு பகத் பாசில் மட்டுமே சரியாக இருப்பார்”என்று சொன்னதாக தெரிவித்துள்ளார் ரஜினி.
அந்த கேரக்டருக்கு பகத் பாசில் தான் சரியாக இருப்பார்….. ‘வேட்டையன்’ ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் ரஜினி!
-
- Advertisement -