ஜெயிலர் 2 படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜெயிலர் திரைப்படம் வெளியானது. நெல்சன் இயக்கத்தில் அனிருத்தின் இசையில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று இந்திய அளவில் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இதனை தொடர்ந்து நெல்சன், ரஜினியை வைத்து ஜெயிலர் 2 படத்தை இயக்குகிறார். முதல் பாகத்தில் நடித்திருந்த ரம்யா கிருஷ்ணன், மிர்னா மேனன், யோகி பாபு ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இது தவிர இந்தப் படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோர் கேமியோ ரோலில் நடிப்பதாகவும் ஏற்கனவே பேச்சு அடிபட்டது.
அதைத் தொடர்ந்து எஸ்.ஜே. சூர்யா, பகத் பாசில், சந்தானம், வித்யா பாலன் போன்ற பிரபலங்களும் இணைந்துள்ளதாக தகவல் கசிந்து வருகின்றன. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் நாளுக்கு நாள் எதிர்பார்ப்புகள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு கோவாவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அங்கு ரஜினி, எஸ்.ஜே. சூர்யா, சந்தானம், பகத் பாசில், வித்யா பாலன் ஆகியோர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
தற்போது இதன் கூடுதல் தகவல் என்னவென்றால், நடிகை வித்யா பாலன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் அவருடைய கேரக்டர் தான் இந்த படத்தில் முக்கிய திருப்புமுனையாக இருக்கும் என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆகையினால் அவருடைய ரோல் என்ன மாதிரியான ரோலாக இருக்கும்? என்று ரசிகர்கள் இப்பொழுதே யோசிக்க தொடங்கி விட்டார்கள்.


