நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர். அந்த வகையில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களையும் கைவசம் வைத்திருக்கிறார். அதில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி இருக்கும் விடாமுயற்சி திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு வர தயாராகி வருகிறது. அதேபோல் ஆதிக்க ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ளார் குட் பேட் அக்லி திரைப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் நடிகர் அஜித் சிறுத்தை சிவா, பிரசாந்த் நீல் ஆகியோரின் இயக்கத்தில் தனது அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் நடிகர் அஜித், அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் துபாயில் நடைபெற இருக்கும் கார் பந்தயத்தில் பங்கேற்க இருக்கிறார்.
அதற்கான பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அஜித், அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம். அதன்படி அஜித் இனிமேல் வருடத்திற்கு ஒரு படம் தான் பண்ணப் போகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் அஜித் ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் அடிக்கடி அஜித்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளிவந்தாலே உற்சாகமடைந்து விடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -