spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஹீரோவான டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர்… “வித் லவ்” திரைப்படத்தின் போஸ்டர் வெளியீடு…

ஹீரோவான டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர்… “வித் லவ்” திரைப்படத்தின் போஸ்டர் வெளியீடு…

-

- Advertisement -

அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் “வித் லவ்” திரைப்படம் பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாகிறது.ஹீரோவான டூரிஸ்ட் ஃபேமிலி  இயக்குநர்… “வித் லவ்” திரைப்படத்தின் போஸ்டர் வெளியீடு… Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment  இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி’  இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா  ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள,  “வித் லவ் ( With Love )” திரைப்படம் வரும் 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

நவீன இளைஞர்களின்  வாழ்வை மையப்படுத்தி வெளியான படம் டீசர், சிங்கிள்  பெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, ரசிகர்கள் இப்படத்தின் வெளியீட்டை எதிர்நோக்கி காத்திருந்த நிலையில், அசத்தலான போஸ்டர் ஒன்றை வெளியிட்டு திரையரங்கு வெளியீட்டை அறிவித்துள்ளது படக்குழு.

we-r-hiring

முழுக்க முழுக்க நவீன கால இளைஞர்களை கவரும், அருமையான  காதல் கதையாக உருவாகிவரும் “வித் லவ் ( With Love )”  படத்தில்,  டூரிஸ்ட் ஃபேமிலி படம் மூலம் கவனம் ஈர்த்த அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கிறார்.   “லவ்வர், டூரிஸ்ட் ஃபேமிலி”படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய மதன் இப்படத்தை இயக்கி உள்ளார்.

தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களில், தொடர் வெற்றிப்   படங்களை வழங்கி வரும் MRP Entertainment நிறுவனம், குட் நைட், லவ்வர் மற்றும் இந்த வருடத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிப்படமான டுரிஸ்ட் ஃபேமிலி படத்தின் ஹாட்ரிக்  வெற்றியைத் தொடர்ந்து, இப்படத்தை தயாரிக்கிறது. Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் இப்படத்தை இணைந்து வழங்குகிறார்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். K.சுரேஷ் குமார் எடிட்டிங் பணிகளை செய்கிறார். ராஜ்கமல் கலை இயக்கம் செய்துள்ளார். உடை வடிவமைப்பாளராக ப்ரியா ரவி பணியாற்றியுள்ளார். விரைவில் படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

ரோஜாவின் கம்பேக்! பூஜையுடன் தொடங்கியது ‘ஜமா’ படப்பிடிப்பு!

MUST READ