spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஇந்த நடிகையை தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்.... விஷால் அறிவிப்பு!

இந்த நடிகையை தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்…. விஷால் அறிவிப்பு!

-

- Advertisement -

நடிகர் விஷால் தனது வருங்கால மனைவி யார் என்பதை அறிவித்துள்ளார்.இந்த நடிகையை தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்.... விஷால் அறிவிப்பு!

தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஷால். சமீப காலமாக இவருடைய திருமணம் குறித்த செய்திகள் தான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. அதன்படி சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசிய விஷால், தான் காதல் திருமணம் தான் செய்யப் போகிறேன் என்றும் கடந்த ஒரு மாதமாக ஒரு பெண்ணை காதலித்து வருவதாகவும் கூறியிருந்தார். ஆனால் அந்தப் பெண் சினிமாவை சார்ந்தவரா? இல்லையா? என்பதையும் அவருடைய பெயரையும் அந்த பேட்டியில் குறிப்பிடவில்லை.

we-r-hiring

அதைத்தொடர்ந்து விஷால் குறிப்பிட்ட அந்த பெண் ஒரு நடிகை என்றும், அந்த நடிகை சாய் தன்ஷிகா தான் என்றும் பல தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளிவர தொடங்கின. இந்நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் விஷால், தன்ஷிகா ஆகிய இருவரும் கலந்து கொண்டனர். அப்போது இருவருமே தனித்தனியே தங்களின் திருமணம் குறித்து அறிவித்திருக்கின்றனர்.

அதன்படி விஷால், “நான் சாய் தன்ஷிகாவை தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன். அவர் அற்புதமானவர். அவர் திருமணத்திற்கு பிறகும் நடிப்பார்” என்று கூறினார்.

அதைத் தொடர்ந்து பேசிய சாய் தன்ஷிகா, “நானும் விஷாலும் வருகின்ற ஆகஸ்ட் 29ஆம் தேதி திருமணம் செய்து கொள்ளப் போகிறோம்” என்று கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ