Homeசெய்திகள்சினிமாஅவர்களுடன் பணியாற்றியது என் அதிர்ஷ்டம்.... நடிகை சமந்தா பேட்டி!

அவர்களுடன் பணியாற்றியது என் அதிர்ஷ்டம்…. நடிகை சமந்தா பேட்டி!

-

நடிகை சமந்தா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்.அந்த வகையில் இவர் விஜய், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார்.அவர்களுடன் பணியாற்றியது என் அதிர்ஷ்டம்.... நடிகை சமந்தா பேட்டி! மேலும் இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு உள்ளிட்ட மொழிப் படங்களிலும் நடித்து பெயர் பெற்றுள்ளார். சினிமாவில் இருந்து சில நாட்கள் விலகி இருந்த நடிகை சமந்தா தற்போது சிட்டாடல் எனும் வெப் தொடரில் நடித்து வருகிறார். அதே சமயம் நடிகர் மம்மூட்டியுடன் இணைந்து மலையாளத்தில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. அடுத்தது பாலிவுட் நடிகர் ஷாருக்கான் உடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் சமந்தா. இந்நிலையில் நடிகை சமந்தா சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில், “நான் ஒரு சராசரி நடிகை தான். நடிப்பில் முதிர்ச்சியை கொண்டுவர இன்னும் முயற்சித்து வருகிறேன். எனது திரை பயணத்தில் எவ்வளவு வெற்றிகளை சந்தித்து இருந்தாலும் அது அனைத்துமே கூட்டு முயற்சியினால் தான் நடந்தது.அவர்களுடன் பணியாற்றியது என் அதிர்ஷ்டம்.... நடிகை சமந்தா பேட்டி! ஒரு படம் வெற்றி பெற்றால் அந்த படத்திற்கு பின்னால் நிறைய நிபுணர்களின் உழைப்பு இருக்கிறது. திறமையான குழுவினர்கள் இருந்தால்தான் நம்முடைய திறமை வெளியில் வரும். அத்தகைய திறமையான நடிகர்- நடிகைகள், திறமையான குழுவினர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோருடன் இணைந்து நான் பணியாற்றியது என்னுடைய அதிர்ஷ்டம்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ