- Advertisement -
ராஜஸ்தானில் இன்ஸ்டாகிராம் பிரபலத்தை அவரது கணவரே நேருக்கு நேர் சுட்டுக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ராஜஸ்தான் மாநிலம் பலோடி நகரைச் சேரந்த நபர் அனாமிகா. இவர் இன்ஸ்டாகிராம் உள்பட சமூக வலைதளங்களில் பிரபலமாக வலம் வருகிறார். ரீல்ஸ், புகைப்படங்களை அடிக்கடி வெளியிடும் அனாமிகாவுக்கு பாலோவர்களும் அதிகம். அவர் தனது அலுவலகத்தில் இருந்தபோது, அங்கு அவரது கணவர் மஹிராம் வந்தார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை போட்டிருக்கின்றனர். அதில் ஆத்திரம் அடைந்த கணவர், மனைவி அனாமிகாவை கையில் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தார். பின்னர் அந்த இடத்திலிருந்து தப்பி ஓடினார்.
குடும்பப்பிரச்சனை காரணமாக கணவர் மஹிராமும், மனைவி அனாமிகாவும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இன்ஸ்டா பிரபலம் என்பதால் ராஜஸ் தான் மாநிலத்தில் மிகவும் அறியப்பட்ட நபராக இருந்துள்ளார் அனாமிகா. வரதட்சனை புகார் தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
#सोशलमीडिया #इंफ्ल्यूंसर का #मर्डर #सीसीटीवी में क़ैद
राजस्थान के फलोदी में नारी कलेक्शन सेंटर चलाने वाली अनामिका बिश्नोई की गोली मारकर हत्या कर दी गई. सूचना पर पहुंची पुलिस ने जब सीसीवीटी फुटेज खंगाले तो होश उड़ा देने वाला सच सामने आया. पता चला कि इस वारदात को महिला के पति… pic.twitter.com/pMWRS8SouM
— Gyanendra Shukla (@gyanu999) February 26, 2024