தனுஷ் – ராஜ்குமார் பெரியசாமி D55 படம் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவரான தனுஷ் ஏகப்பட்ட படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் கடைசியாக ‘குபேரா’ திரைப்படம் வெளியான நிலையில் அடுத்தது ‘இட்லி கடை’ திரைப்படம் வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் தனுஷ், ‘தேரே இஷ்க் மெய்ன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இது தவிர அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகும் புதிய படம் ஒன்றை கைவசம் வைத்துள்ளார். மேலும் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனது 54வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இதைத்தொடர்ந்து தனுஷ், ‘அமரன்’ படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 55வது திரைப்படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாகவே இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி பூஜையும் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் தற்காலிகமாக D55 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளிவந்துள்ளது. அதாவது இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சௌத்ரி நடிக்க உள்ளார் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்கப் போகிறார் என்று பேச்சு அடிபட்டது. ஆனால் தற்போது மீனாட்சி சௌத்ரியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இந்த படத்தில் யார் கதாநாயகியாக நடிக்க போகிறார்? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மேலும் D55 படத்தை கோபுரம் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.