spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபிரபல நடிகருடன் போட்டி போடுகிறாரா யோகி பாபு?.... அவரே சொன்ன பதில்!

பிரபல நடிகருடன் போட்டி போடுகிறாரா யோகி பாபு?…. அவரே சொன்ன பதில்!

-

- Advertisement -

நடிகர் யோகி பாபு ஆரம்பத்தில் நகைச்சுவை நடிகராக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். பிரபல நடிகருடன் போட்டி போடுகிறாரா யோகி பாபு?.... அவரே சொன்ன பதில்!இருப்பினும் மடோன் அஸ்வின் இயக்கத்தில் இவர் நடித்து வெளியான மண்டேலா திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன் பின்னர் தொடர்ந்து பல படங்களில் கதாநாயகனாக நடித்து பெயரையும் புகழையும் பெற்று வருகிறார் யோகி பாபு.பிரபல நடிகருடன் போட்டி போடுகிறாரா யோகி பாபு?.... அவரே சொன்ன பதில்!

அதேசமயம் யோகி பாபுவை போல் நடிகர் சூரியும் ஆரம்பத்தில் நகைச்சுவை நடிகராக நடித்து பின்னர் ஹீரோவாக உருவெடுத்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான விடுதலை, கருடன் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளையும் பெற்றது. இந்நிலையில் நடிகர் யோகி பாபுவிடம், உங்களுக்கும் சூரிக்கும் போட்டி இருக்கிறதா? என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு யோகி பாபு, பிரபல நடிகருடன் போட்டி போடுகிறாரா யோகி பாபு?.... அவரே சொன்ன பதில்!“நாங்கள் இரண்டு பேரும் தொடக்கத்தில் இருந்தே இணைந்து நடித்து வளர்ந்தவர்கள். இருவருமே அடுத்த வேலை சோற்றுக்கு வழியில்லாமல் வந்தவர்கள். எனவே ஒருவரின் வளர்ச்சியை மற்றொருவர் மகிழ்ச்சியோடு தான் காண்கிறோம். நான் நடித்த மண்டேலா படத்தை பார்த்து சூரி என்னை பாராட்டினார். அவர் நடித்த விடுதலை, கருடன் படங்களை பார்த்து நான் அவரை பாராட்டினேன். எனக்கும் அவருக்கும் இடையில் எந்த வித போட்டியும் இல்லை. இது போன்ற பேச்சு டீக்கடையில் நேரத்தை வீணடிக்க பேசும் பேச்சு” என்று பதிலளித்துள்ளார்.

MUST READ