ஜெயிலர் 2 படக்குழு மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான ‘கூலி’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால், அடுத்ததாக ரசிகர்கள் பலரும் ஜெயிலர் 2 படத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர். கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இதன் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும், நெல்சனின் இயக்கத்திலும் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து விடும் எனவும் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் தேதி படம் திரைக்கு வரும் எனவும் சொல்லப்படுகிறது.
Wishing everyone a super Deepavali 🪔🎇😎 Here’s a exclusive BTS from #Jailer2#HappyDeepavali pic.twitter.com/D1M4esKznG
— Sun Pictures (@sunpictures) October 20, 2025

இதற்கிடையில் படத்தில் ஏகப்பட்ட பிரபலங்கள் இணைந்து இருப்பதாக பல தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் இன்று (அக்டோபர் 20) தீபாவளி ஸ்பெஷலாக மேக்கிங் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் செம வைரலாகி வருகிறது.
மேலும் ஜெயிலர் படத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மிர்னா மேனன் ஆகியோர் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்கின்றனர் என்பதும் அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.