கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஜெயிலர். இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா போன்ற சிறப்பு தோற்றத்திலும் நடித்திருந்தனர். இந்த படத்தில் நடிகர் விநாயகன் வில்லனாக மிரட்டி இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பிரம்மாண்ட வெற்றி கண்டது. அடுத்ததாக ஜெயிலர் 2 திரைப்படம் உருவாக இருக்கிறது. இந்நிலையில் ஜெயிலர் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்த விநாயகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதாவது விநாயகன் கொச்சியிலிருந்து ஐதராபாத் வழியே கோவா செல்லும் விமானத்தில் அவர் பயணித்த நிலையில் மதுபோதையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிஐஎஸ்எப் வீரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்திருக்கிறார்.
இதனால் சிஐஎஸ்எப் வீரர் விநாயகன் மீது புகார் கொடுத்ததன் அடிப்படையில் ஐதராபாத் போலீசார் விநாயகன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய பின் விநாயகனை போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.
நடிகர் விநாயகன் ஆரம்பத்தில் மலையாள திரைப்படங்களில் பணியாற்றி இருந்தாலும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்த பின்னர் ஏராளமான தமிழ் ரசிகர்களை சேகரித்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.