Homeசெய்திகள்சினிமா'ஜமா' பட பிரபலம் உயிரிழப்பு.... உருக்கமாக இரங்கல் தெரிவித்த பாரி இளவழகன்!

‘ஜமா’ பட பிரபலம் உயிரிழப்பு…. உருக்கமாக இரங்கல் தெரிவித்த பாரி இளவழகன்!

-

- Advertisement -

ஜமா பட பிரபலம் உயிரிழந்ததற்காக பாரி இளவழகன் தனது சமூக வலைதள பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.ஜமா பட பிரபலம் உயிரிழப்பு.... உருக்கமாக இரங்கல் தெரிவித்த பாரி இளவழகன்!கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் பாரி இளவழகனின் நடிப்பிலும் இயக்கத்திலும் ஜமா திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் பாரி இளவழகன் தவிர சேத்தன், அம்மு அபிராமி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தெருக்கூத்து கலையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தில் நடித்திருந்த பாரி இளவழகனின் நடிப்பும் பலராலும் பாராட்டப்பட்டது. ஜமா பட பிரபலம் உயிரிழப்பு.... உருக்கமாக இரங்கல் தெரிவித்த பாரி இளவழகன்!அதுமட்டுமில்லாமல் இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசை படத்திற்கு பக்க பலமாக அமைந்து படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாகவும் அமைந்தது. சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் ஓடிடியில் வெளியான பின்னரும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தில் கலை இயக்குனராக பணியாற்றிய ஸ்ரீகாந்த் உயிரிழந்துள்ளார். ஜமா பட பிரபலம் உயிரிழப்பு.... உருக்கமாக இரங்கல் தெரிவித்த பாரி இளவழகன்!இந்த தகவல் ஜமா படக்குழுவினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இது தொடர்பாக பாரி இளவழகன் தனது சமூக வலைதள பக்கத்தில், “சகோதரரே நான் உங்களை மிகவும் மிஸ் செய்கிறேன். நீங்கள் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் ஜமா திரைப்படம் இந்த அளவிற்கு வந்திருக்காது. கலை என்றும் உன் வடிவில் வாழும்” என்று உருக்கமான பதிவினை வெளியிட்டுள்ளார்.

MUST READ