spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஇன்று வெளியாகும் 'ஜனநாயகன்' பட ரிலீஸ் தேதி?

இன்று வெளியாகும் ‘ஜனநாயகன்’ பட ரிலீஸ் தேதி?

-

- Advertisement -

ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி இன்று வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது.இன்று வெளியாகும் 'ஜனநாயகன்' பட ரிலீஸ் தேதி?

தளபதி என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் விஜயின் 69 ஆவது படமாக உருவாகும் திரைப்படம் தான் ஜனநாயகன். இந்த படத்தை கே வி என் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க ஹெச். வினோத் இந்த படத்தை இயக்குகிறார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். சத்யன் சூரியன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க வில்லனாக பாபி தியோல் நடிக்கிறார். மேலும் நடிகை மமிதா பைஜு இதில் விஜயின் மகளாக நடிக்கிறார் என சொல்லப்படுகிறது. அடுத்தது பிரகாஷ்ராஜ், கௌதம் வாசுதேவன், பிரியாமணி, நரேன் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டு சென்னை போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று வெளியாகும் 'ஜனநாயகன்' பட ரிலீஸ் தேதி?அடுத்தது இந்த படமானது அரசியல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி வருவதாகவும் சொல்லப்படுகிறது. எனவே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில் இன்னும் ஒரு மாதத்திற்குள் இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து விடும் எனவும் தகவல் வெளியாகி வருகின்றனர். இந்நிலையில் இன்று (மார்ச் 24) ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

we-r-hiring

இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் போது இப்படமானது 2025 அக்டோபர் மாதம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு சில காரணங்களால் இப்படம் 2026 பொங்கலுக்கு திரைக்கு வரும் என சமூக வலைதளங்களில் சமீப காலமாக பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ