Homeசெய்திகள்சினிமாமிஸ்டர் அன்ட் மிஸஸ் மாஹி படத்திற்காக தீவிர கிரிக்கெட் பயிற்சி.. ஜான்வி கபூர் வீடியோ வைரல்...

மிஸ்டர் அன்ட் மிஸஸ் மாஹி படத்திற்காக தீவிர கிரிக்கெட் பயிற்சி.. ஜான்வி கபூர் வீடியோ வைரல்…

-

நடிகை ஸ்ரீ தேவி மற்றும் தயாரிப்பாளரும் நடிகருமான போன கபூருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஜான்வி கபூர், இளைய மகள் குஷி கபூர். ஜான்வி கபூர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்தி திரையுலகில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து அவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தமிழில் நயன்தாரா நடித்த கோலாமவு கோகிலா படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்தார். அதேபோல, மலையாள படத்தின் இந்தி ரீமேக்கிலும் அவர் நடித்து புகழ் பெற்றார்.

இந்தியில் முன்னணி நடிகையாக வலம் வரும் அவர், கடந்த ஆண்டு தெலுங்கிலும் தடம் பதித்தார். ஜூனியர் என்.டி.ஆர். நடிக்கும் தேவரா திரைப்படத்தில் அவர் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதே சமயம், அவர் தெலுங்கிலும் புதிய படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார். ராம்சரண் நடிக்கும் 16-வது திரைப்படத்தில் அவர் நாயகியாக நடிக்கிறார்.

https://x.com/i/status/1793516252453101584

தற்போது, இந்தியில் ஜான்வி கபூர் புதிய படத்தில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இத்திரைப்படத்திற்கு மிஸ்டர் அன்ட் மிசஸ் மாஹி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தை ஷரன் ஷர்மா இயக்க, ராஜ்குமார் ராவ் நாயகனாக நடிக்கிறார். இத்திரைப்படம் வரும் மே மாதம் 31-ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், இத்திரைப்படத்திற்காக நடிகை ஜான்வி கபூர் கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்ட காணொலி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

MUST READ