பிரதர் படத்தில் ட்ரைலர் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
ஜெயம் ரவி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தான் பிரதர். இந்த படத்தினை சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி, பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய எம். ராஜேஷ் இயக்கியிருக்கிறார். இதனை ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம் தயாரிக்க ஹாரிஸ் ஜெயராஜ் இதற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு விவேகானந்த் சந்தோஷம் இதன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்க அக்காவாக பூமிகா சாவ்லா நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து நட்டி நடராஜ், சரண்யா பொன்வண்ணன், சீதா, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் படமானது வருகின்ற அக்டோபர் 31ஆம் நாளில் தீபாவளி தினத்தை முன்னிட்டு திரைக்கு வர தயாராகி வருகிறது. அதன்படி படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் படத்திலிருந்து வெளியான மக்காமிஷி பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அடுத்தது இந்த படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். அதாவது படம் ரிலீஸாவதற்கு இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில் படக்குழுவினர் இன்னும் பிரதர் படத்தின் டிரைலரை வெளியிடவில்லை என்று ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் இன்று (அக்டோபர் 28) வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.