spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் 'த்ரிஷ்யம் 3'...... படப்பிடிப்பு தொடக்கம்?

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் ‘த்ரிஷ்யம் 3’…… படப்பிடிப்பு தொடக்கம்?

-

- Advertisement -

ஜீத்து ஜோசப், மோகன்லால் காம்பினேஷனில் உருவாகும் படங்களின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அந்த வகையில் இவர்களது கூட்டணியில் தற்போது ‘ராம்’ எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் 'த்ரிஷ்யம் 3'...... படப்பிடிப்பு தொடக்கம்?இதற்கிடையில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான த்ரிஷ்யம் 1, த்ரிஷ்யம் 2, 12th Man, நேரு ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதிலும் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான த்ரிஷ்யம் திரைப்படம் பல்வேறு ரசிகர்களின் பேவரைட் படமாக அமைந்துள்ளது. பரபரப்பான திரைக்கதையில் வெளியான இந்த படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தாலும் அதிக லாபத்தை பெற்று தந்தது. அதேசமயம் கடந்த 2021ல் த்ரிஷ்யம் 2 திரைப்படமும் வெளியாகி மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. எனவே அடுத்தபடியாக த்ரிஷ்யம் 3 திரைப்படம் எப்போது உருவாகும் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதன்படி த்ரிஷ்யம் 3 திரைப்படம் உருவாகப்போவதை நடிகர் மோகன்லாலும் சமீபத்தில் தனது சமூக வலைதள பக்கத்தில் உறுதி செய்திருந்தார்.

 

View this post on Instagram

 

A post shared by Jeethu Joseph (@jeethu4ever)

இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் ஜீத்து ஜோசப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படப்பிடிப்பு பணிகள் நடப்பது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆனால் இது எந்த படப்பிடிப்பு என்பதை அவர் குறிப்பிடவில்லை. ஆனால் இந்த வீடியோவை கண்ட பலரும் இது த்ரிஷ்யம் 3 படப்பிடிப்பாக இருக்கலாம் என்று தங்களின் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இருப்பினும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ