ஜூனியர் என்.டி.ஆரின் 43-வது பிறந்தநாளை முன்னிட்டு, இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் அவர் நடிக்கும் புதிய திரைப்படமான ‘தி டிராகன்’ (Dragon) படத்தின் மிரட்டலான அதிகாரப்பூர்வ க்ளிம்ப்ஸ் (Glimpse) வீடியோ வெளியாகி இணையத்தில் பெரும் சாதனை படைத்து வருகிறது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ஜூனியர் என்.டி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடித்துவரும் புதிய திரைப்படமான தி டிராகன் படத்தின் முதல் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
“THE DEVIL WAS BORN” என்ற அதிரடியான டேக் லைனுடன் வெளியிடப்பட்டுள்ள இந்த க்ளிம்ப்ஸ், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. மாஸ் மற்றும் ஆக்ஷன் காட்சிகளால் நிரம்பிய இந்த வீடியோவில், ஜூனியர் என்.டி.ஆர் வித்தியாசமான தோற்றத்தில் காட்சியளிப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்தப் படத்தை, பிரசாந்த் நீல் இயக்குகிறார். முன்னதாக கேஜிஎஃப் மற்றும் சலார் போன்ற பிரம்மாண்ட வெற்றி படங்களை இயக்கிய பிரசாந்த் நீல், தற்போது ஜூனியர் என்.டி.ஆருடன் இணைந்திருப்பதால் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்.டி.ஆர் ஆர்ட்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படம், உலகம் முழுவதும் 2027 ஆம் ஆண்டு ஜூன் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. க்ளிம்ப்ஸ் வெளியான சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், ரசிகர்கள் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
நடிகர் அதர்வாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து – ’‘இதயம் முரளி’ படக்குழு வெளியிட்ட ஸ்பெஷல் போஸ்டர்கள்
