Homeசெய்திகள்சினிமாதள்ளிப்போகும் 'கைதி 2' படப்பிடிப்பு..... லோகேஷ் கனகராஜின் பிளான் என்ன?

தள்ளிப்போகும் ‘கைதி 2’ படப்பிடிப்பு….. லோகேஷ் கனகராஜின் பிளான் என்ன?

-

- Advertisement -
kadalkanni

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது முதல் படமான மாநகரம் படத்திற்கு பிறகு கைதி திரைப்படத்தை இயக்கியிருந்தார். கார்த்தி, நரேன், அர்ஜுன் தாஸ், ஹரிஷ் உத்தமன், ஜார்ஜ் மரியான் ஆகியோரின் நடிப்பில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. தள்ளிப்போகும் 'கைதி 2' படப்பிடிப்பு..... லோகேஷ் கனகராஜின் பிளான் என்ன?சாம் சி எஸ்- இன் இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலம் கொடுத்தது. மேலும் இந்த படம் நடிகர் கார்த்தியை மாறுபட்ட பரிமாணத்தில் காட்டியதோடு லோகேஷ் கனகராஜுக்கு பெயரையும் புகழையும் பெற்று தந்தது. இதைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் விக்ரம், லியோ ஆகிய படங்களை தனது எல்சி யு என்ற கான்செப்டின் கீழ் இயக்கி வரும் நிலையில் இவர் இயக்கும் ஒவ்வொரு படங்களின் மீதான எதிர்பார்ப்பும் மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி தற்போது இவர் ரஜினிகாந்த் நடிப்பில் கூலி திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இதைத்தொடர்ந்துதான் கைதி 2 திரைப்படத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ். தள்ளிப்போகும் 'கைதி 2' படப்பிடிப்பு..... லோகேஷ் கனகராஜின் பிளான் என்ன?கைதி 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்து வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்படும் என சமீபத்தில் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. ஆனால் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ், கூலி திரைப்படத்தின் ரிலீஸுக்கு பின்னர் மூன்று மாதங்கள் கழித்து கைதி 2 திரைப்படத்தை இயக்கப் போவதாக தெரிவித்துள்ளார். எனவே 2025 ஆகஸ்ட் மாதத்தில் கைதி 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ