Homeசெய்திகள்சினிமாஇந்தியன்-2 சண்டை பயிற்சியாளர்களுடன் கமல்

இந்தியன்-2 சண்டை பயிற்சியாளர்களுடன் கமல்

-

இந்தியன்-2 சண்டை பயிற்சியாளர்களுடன் கமல்

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996-ம் ஆண்டு வெளியான இந்தியன் படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

இந்தியன் 2 படத்திற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு 2017-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது, அதன் பின்னர் பல இடையூறுகள் ஏற்பட்டு நீண்ட நாள் கிடப்பில் போடப்பட்டிருந்தத நிலையில் தற்போது படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள தனியார் ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது. இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கின்றன.

இந்தியன் இரண்டாம் பாகத்தில் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத்தி சிங், பிரியா பவானி சங்கர், டெல்லி கணேஷ், ஜார்ஜ் மரியன், மனோபாலா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, ஜெயபிரகாஷ், ஆகியோர் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. படத்திற்கு
அனிரூத் இசையமைக்கிறார்.

இந்நிலையில், சென்னை அருகே உள்ள சதுரங்கப்பட்டினம் என்ற இடத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். வெளிநாட்டு ஸ்டன்ட் கலைஞர்கள் பங்கேற்று நடிக்கும் சண்டைக் காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டு வருகிறது. மேலும் அப்போது சண்டைப் பயிற்சி குழுவினரை கமல்ஹாசன் சந்தித்த புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

MUST READ